• Dec 26 2024

கங்குவா எதிரொலி.. அஜித் படத்திலிருந்து தூக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்.. அதிரடி தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. விடாமுயற்சி திரைப்படம் நீண்ட நாட்களாக இழுபட்டு வரும் நிலையில் இதன் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் குட் பேட் அக்லி திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் இறுதியாக நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பின்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வருடமே ஆரம்பிக்கப்பட்ட போதும் இன்னும் இதன் வேலைகள் முடிந்த பாடில்லை.

அஜித் வழமையாக ஒரு படத்தை முடித்துவிட்டு சில மாதங்கள் ரெஸ்ட் எடுத்து விட்டு தான் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கு எடுப்பார். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி, தற்போது இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.


இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேவி ஸ்ரீ பிரசாத்தை இந்த படத்தில் இருந்து தூக்க காரணம் கங்குவா படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் தான் என்று கூறப்படுகின்றது. தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement