• Dec 26 2024

கங்குவாவை மீட்க இப்படியொரு சதித்திட்டம் போட்டதா சூர்யா குடும்பம்? ஷாக் நியூஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சூர்யாவின் படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதோடு வரலாற்று கதை அம்சம் நிறைந்த படமாகவும் தற்கால நவீன தொழில்நுட்பத்தில் நிகழும் கதையைக் கொண்டு இரண்டு ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதோடு இதில் பாலிவுட் நடிகர்களான திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தின் இறுதியில் கார்த்தி மெயின் வில்லனாகவே மிரட்டி இருப்பார்.

கங்குவா படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. அதிலும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. இதனால் யாரும் முதல் நாள் காட்சிக்கு விமர்சனம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடி காட்டியது. அதற்குப் பிறகு ஜோதிகாவும் இந்த படத்திற்கு எழுந்த நெகட்டிவ் விமர்சனம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

d_i_a

இந்த நிலையில் கங்குவா படத்தை காப்பாற்றுவதற்காக சூர்யாவின் குடும்பமே சதித்திட்டம் போட்டதென பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலா தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், கங்குவா படத்திற்கு பிறகு எழுதப்படாத சட்டம் கொண்டு வந்திருக்காங்க.. யாருமே தியேட்டர் வாசல்ல நின்னு படத்தை விமர்சனம் சொல்லக்கூடாது பப்ளிக் ரிவ்யூ கொடுக்கக் கூடாது போட்டோ எடுக்கக்கூடாது என்று..


இது கருத்துரிமை. யாரும் தலையிட முடியும். யாரும் ஒட்டுமொத்தமா சொல்லல.. நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வந்த ஒரு அறிக்கை . அதன்படி கோர்ட்ல போய் தடை வாங்கணும். தியேட்டர் முன்னாடி மீடியாக்களை வர விடக்கூடாது என்றெல்லாம் சொன்னார்கள்.

இந்த லெட்டர் பேடில் எஸ். ஆர் பிரபுவை டேட் பண்ணி விஜய் ரசிகர்கள் ஒரு விமர்சனம் போட்டிருந்தாங்க. உங்க கங்குவா படம். உங்க உறவினர் தான் சூர்யா. அதனால இப்படி ஒரு அறிக்கை  விட்டிங்கலானு கேட்டாங்க. ப்ளூ சட்டை மாறனும் கருத்து சுகந்திரத்துல தலையிட நீங்க யாரு என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்போ அலெக்ஸ் பாண்டியன் படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தெறிக்க விட்டது. நடப்பு தயாரிப்பாளர் சங்கத் பொறுப்பாளர் தனஞ்செயன் அவர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன்ல வேலை செய்றாரு.. இந்த லெட்டர் பேடில் பாரதிராஜாவின் டிஜிட்டல் கையெழுத்து போடப்பட்டுள்ளது.

 அவருக்கு உடல்நிலை சரியில்லை . அவரின் காதுக்கு இந்த விஷயம் சென்றதா என்று தெரியவில்லை. அவரிடம் கையெழுத்தே வாங்காமல் இப்படி ஒரு அறிக்கையை விடலாமா? 350 ரூபாய் 400 ரூபாக்கு படம் பார்த்தவங்க நல்லா இல்லன்னு கொந்தளிச்சாங்க.

இப்போ வந்து தயாரிப்பாளர் சங்க லெட்டர் பேட்டை உங்க சுயநலத்துக்காக பயன்படுத்தினீங்க என்றால் அது எந்த அளவுக்கு நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார் செய்யாறு பாலா.

Advertisement

Advertisement