• Dec 28 2024

அந்த யூடியூப் பிரபலத்தின் தம்பியா குட்டி விஜய்? வெளியான சுவாரஸ்ய தகவல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் தான் கோட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பதோடு அவருடன் முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடிக்கின்றார்கள்.

செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இது தொடர்பான அப்டேட் தற்போது தொடர்ந்தும் வெளியானவாறு உள்ளன. இதனால் விஜயின் ரசிகர்கள் பெரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளார்கள்.

கோட் படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியானதோடு சமீபத்தில் இந்த படத்தின் ட்டெய்லர் வெளியாகி  மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதுவரை வெளியான மூன்று பாடல்களும் பெரிதாக ஹிட் கொடுக்காத நிலையில், டெய்லர் அதையெல்லாம் முறையடித்து சாதனை படைத்திருந்தது.

கோட் திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் நடித்து வருகின்றார். அதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான மெல்லிசை பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், அதில் சிறு வயது விஜயாக நடித்திருக்கும் பையன் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி குறித்த பையனின் பெயர் அகில். இவர் யூடியூப்பில் ரவுடி பேபி சேனலில் வரும் ஆலியாவின் தம்பி. ஒரு பக்கம் ஆலியா சேனல் மூலம் பிரபலமான நிலையில், அகில் படங்களில் நடித்து பிரபலமாகி வருகின்றார்.


அகிலின் அம்மா ஒரு பேட்டியில் தன் மகன் கோட் படத்தில் விஜய்க்கு மகனாக நடிப்பதை பற்றி பல விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அப்போது விஜய் அகிலின் அம்மாவிடம் இவனை எப்படி சமாளிக்கிறீங்க என்ன கேட்டாராம். அந்த அளவுக்கு வாலுத்தனம் பண்ணுவாராம் குட்டி விஜய் அகில்.

அகிலை விஜய் முன்னாடி திட்ட மாட்டாராம் அவருடைய அம்மா. அதையும் மீறி திட்டினால் ஏன் சின்ன பையன் திட்டுகிறீர்கள் என்று விஜய் சொல்லுவாராம். மேலும் செட்டில் விஜய்க்கு சில கார் கேம்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பாராம் அகில் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement