• Dec 26 2024

3 நொடி வீடியோக்கு 10 கோடி கேட்ட தனுஷ்.. தன்னை பழிவாங்குவதாக நயன் பரபரப்பு குற்றச்சாட்டு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல டாப் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரும்பான்மையானவை சூப்பர் ஹிட் அடித்தன. இதன் காரணத்தினாலே 40 வயதான போதிலும் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

மலையாள நடிகை நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்பு விஜய், சூர்யா, அஜித், சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். நயன்தாரா நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பான்மையானவை வெற்றி படங்களாகவே காணப்பட்டது.

இதை தொடர்ந்து சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

d_i_a

இந்த நிலையில், தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக தனுஷ் எனது திருமணம் தொடர்பான டாக்குமென்ட்ரி வெளியிட்டை தாமதமாக்கினார். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை டாக்குமென்டரியில் பயன்படுத்தியதற்கு தனுஷ் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 3 நிமிட டாக்குமென்ட்ரிக்கு 10 லட்சம் கேட்கிறார்.


தனுஷின் உண்மையான முகம் தற்போது தெரிய வருகின்றது. எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான காதல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் நானும் ரவுடிதான் என நயன்தாரா கூறியுள்ளார்.

இவ்வாறு தனுஷ் தன் மீது உள்ள பழிவாங்கல் காரணமாகவே இவ்வாறு செய்துள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் கடந்த இரண்டு வருடங்களாகவே நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடலை பயன்படுத்துவதற்கு தனுஷ் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணத்தினால் நானும் ரவுடிதான் பாடல் இல்லாமலேயே திருமண ஆவணப்படம் வெளியானது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement