• Jun 14 2026

தனுஷ் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.. வேறு எந்த படமும் வொர்த் இல்லையா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் தனுஷ் உள்ளார். தற்போது தனக்கேற்ற வகையில் வித்தியாசமான படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்து வருகின்றார்.

இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் நடிப்பில் இந்தப் படம் வெளியானது. இதற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

இலங்கையில் நடந்த சில போர் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அதனை இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக நடந்த கதையாக சித்தரித்து கேப்டன் மில்லர் படத்தை அருன் மாதேஷ் இயக்கி இருந்தார்.


இந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற உள்ள பத்தாவது சர்வதேச திரைப்பட விழாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழி திறன் திரைப்படம் 2024 என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தைத் தவிர வேறு எந்த தமிழ் திரைப்படமும் இதற்கு பரிந்துரைக்கப்படவில்லை என்பது முக்கியமான தகவலாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement