• Dec 26 2024

மீனாவை தேடி தெரு தெருவா அலைந்த முத்து.. இறுதியில் ஷாக் கொடுத்த ஸ்ருதி!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசைசீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும் செல்வமும் மீனாவை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போக, அங்கு சத்யா நிற்கின்றார். அங்கு வைத்து இவர்தான் எங்கள் அக்கா புருஷன். இவராலதான் எங்க அக்கா காணாமல் போன என்று சத்யா சொல்ல, முத்துவுக்கும்  சத்யாவுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படுகின்றது.

இதை அடுத்து செல்வம், முத்து இருவரும் தெருத்தெருவாக மீனாவை தேடி அலைந்து திரிகின்றார்கள். மீனா செல்லும் பூக்கடைக்கெல்லாம் சென்று கேட்க, அங்கு வரவில்லை என்று சொல்கின்றார்கள். இறுதியாக செல்வம் வீட்டில் கொண்டு வந்து முத்துவை விட்டு செல்கிறார்.

இதன் போது முத்து உள்ளே செல்ல, மீனா கிச்சனில் இருந்து  தண்ணி குடித்துக் கொண்டு வெளியே வருகிறார். முத்துவை பார்த்ததும் எங்க போயிருந்தீங்க? ஏன் இவ்வளவு நேரம் எனக்  கேட்க, முத்து கோவப்பட்டு கத்துகிறார். இந்த சத்தத்தை கேட்டு எல்லாரும் வெளியே வர, உன்ன காணல என தெரு தெருவா அலைஞ்சிட்டு வாரேன் போகும்போது சொல்ல மாட்டியா என்று முத்து கோபத்தில் மீனாவை அடிக்கப் போகிறார்.


இதைப் பார்த்து அண்ணாமலை தடுக்க விஜயா இன்னும் ஏத்தி விடுகிறார். ஆனாலும் முத்து மீனாவை கட்டிப்பிடித்து கதறி அழுகிறார்.இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகி நிற்கின்றார்கள். பின்பு ஏன் சொல்லிவிட்டு போகவில்லை என ஆளாளுக்கு ஒரு கதை கேட்க, மீனா ஸ்ருதியிடம் கோவிலுக்கு போவதாக சொல்லிவிட்டு போவதாக சொல்லிக் கொண்டு  இருக்க, ஸ்ருதி காதில் ப்ளூடூத் போட்டுக்கொண்டு இருந்தபடியால் மீனா சொன்னதே அவர் கேட்கவில்லை.

இறுதியாக ஸ்ருதியும்  வீட்டுக்கு வர மீனாவிடம் எங்க போனீங்க எல்லாரும் தேடிட்டு இருந்தாங்க என்று கேட்க, மீனா நான் உங்களிடம் சொல்லிட்டு தானே போனேன் என்று சொல்லுகிறார். ஆனாலும் எனக்கு சொல்லவில்லையே என்று ஸ்ருதி  சொல்லுகிறார். இதனால் மனோஜ், மீனா அப்ப பொய் சொல்லுறா  என சொல்லுகிறார். இதுதான் இன்றைய தினம் இடம்பெற்ற எபிசோட்.

Advertisement

Advertisement