தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். அதன் பின்பு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்திலும், டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.
அஸ்வந் மாரிமுத்து இயக்கும் டிராகன் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான 'ரைஸ் ஆப் தி டிராகன்' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு வழித்துணை என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி வைரலானது.
இந்த படம் எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரவபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. இந்த படம் இளைஞர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆனாலும் விடாமுயற்சி திரைப்படம் ஆறாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த நிலையில், டிராகன் படத்தின் பட்ஜெட் சுமார் 25 கோடி என வலைப்பேச்சு அந்தணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் தனுஷ் இயற்றிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படமும் ரிலீசாக உள்ளது.
இதனால் இரண்டு தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் ஐந்து அரை கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போதும் அந்த படம் 30 கோடி அளவில் வசூலை வாரி குவித்தது.
இதனாலேயே டிராகன் படத்தின் நிறுவனம் பிரதீப் மீது உள்ள நம்பிக்கையால் பட்ஜெட்டை கொட்டி படம் எடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனால் இரண்டு படங்களும் இளைய தலைமுறையை டார்கெட் பண்ணி ரிலீஸாவதால் அவர்களுக்கு டபிள் செலவு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Listen News!