• Oct 26 2024

தனுஷுக்கு கலாநிதிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! ஒவ்வொன்றும் இத்தனை கோடிகளா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தற்போது இயக்குனராகவும் களமிறங்கி அதில் வெற்றி கண்டவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் தனுசுடன் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி, காளிதாஸ், சுதீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

ராயன் படத்தில் மொத்தமாக ஐந்து பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் முன்பே வாட்டர் பாக்கெட் பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இதுவரையில் 25 மில்லியன் வியூசை கடந்து சாதனை படைத்துள்ளது.


இந்த நிலையில், ராயன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷை நேரில் சந்தித்து இரண்டு செக்கை சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்துள்ளார்.

அதாவது ஒரு செக் இயக்குனர் தனுஷுக்கும் மற்றொரு செக் நடிகர் தனுஷ் இருக்கும் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதோடு அதில் ஒவ்வொரு செக்கிற்கும் ஒரு கோடி என இரண்டு கோடிகள் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement