• Dec 26 2024

தவெக கொடியிலுள்ள யானைகளை அகற்றுங்கள்! இந்தா எதிர்ப்புக்கு வந்துட்டாங்கல்ல..!!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் விஜய். இவர் ஒரு கட்டத்தில் வசூல் சக்கரவர்த்தியாகவே மாறினார். தற்போது வரையில் 32 வருடங்களாக சினிமாவில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார். இவரது சம்பளம் ஒவ்வொரு படத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது இருநூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் காணப்படுகின்றார்.

தனது தந்தையிடம் அடம் பிடித்து தான் நடிகர் விஜய் நடிப்பதற்கு வந்தாராம். தற்போது அரசியலுக்கு போக போகின்றேன் என சொல்லி மக்கள் சேவையை செய்வதற்கு ஆரம்பித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் கால் பதிப்பது தொடர்பாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமும் பேசி வந்துள்ளார்.

அது மட்டும் இன்றி விஜய் ரசிகர் மன்றம் பின்னாளில் விஜய் மக்கள் மன்றம் என மாற்றப்பட்டது. விஜயின் மன்ற நிர்வாகிகள் பல ஊர்களிலும் அன்னதானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது, ஊனமுற்றவருக்கு உதவுவது, வறுமையில் வாடுபவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது என பல நல்ல காரியங்களை செய்து வந்தார்கள்.


இதை தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமது இலக்கு 2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தான் என ஆணித்தரமாக சொல்லி உள்ளார். அதுவரையில் அரசியல் சார்ந்த பல களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்

இன்றைய தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை சென்னையில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். அந்தக் கொடி இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது விஜயின் கட்சி கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் கொடியில் ஏற்கனவே யானை உள்ளதால் அது பற்றி குறித்த கட்சியின் தலைவர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும். தேர்தல் ஆணைய விதிப்படி சிக்கிம், அசாம் தவிர எந்த மாநில கட்சிகளும் யானையை கொடியிலோ சின்னமாகவோ பயன்படுத்த முடியாது. இது தொடர்பில் கட்சி தலைமையிடம் பேசி வருகின்றோம் என கூறி உள்ளார்.

Advertisement

Advertisement