• Dec 26 2024

’ராயன்’ படத்தின் முதல் விமர்சனம்.. சொன்னது இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த சன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் கலாநிதி மாறன் கூறிய விமர்சனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷின் 50வது படமான ’ராயன்’ என்ற படத்தை அவரே இயக்கி உள்ள நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. நேற்று இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் இந்த படத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேற்று பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

படம் பார்த்த பின்னர் கலாநிதி மாறன் அனைத்து காட்சிகளும் அருமையாக இருக்கிறது என்றும் ’ஏ’ சான்றிதழுக்காக சில காட்சியை கட் செய்ய வேண்டாம் என்றும் கூறியதோடு, தனுஷை பாராட்டியதாகவும் தனுஷும் கலாநிதி மாறன் பாராட்டு காரணமாக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



திரையரங்குகளில் ’ஏ’ சான்றிதழுடன் இந்த படத்தை வெளியிட்டு அதன் பிறகு சாட்டிலைட் மற்றும் டிஜிட்டலுக்கு என்று தனியாக சில காட்சிகளை மட்டும் கட் செய்து ’யூஏ’ சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று கலாநிதி மாறன் தனுஷுக்கு ஐடியா கொடுத்ததாகவும் அதை தனுஷும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே திரையரங்குகளில் மட்டுமே இந்த படத்தின் முழுமையான காட்சிகள் வெளியாகும் என்றும் ஓடிடி, சாட்டிலைட்டில் சில காட்சிகள் கட் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலையும் வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement