• Dec 26 2024

நயன்தாராவால் கவினுக்கு ஏற்பட்ட சிக்கல்? விஜய் பட தயாரிப்பாளருக்கே இந்த நிலைமையா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கவின் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நயன்தாரா பிரச்சனை செய்து வருவதாகவும் இதனால் இந்த படமே டிராப் ஆகும் அளவுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’ஸ்டார்’ படத்திற்கு பிறகு தற்போது கவினுக்கு திரை உலக வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் அவற்றில் ஒன்று செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் கவின் மற்றும் நயன்தாரா நடிக்க உள்ள படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நயன்தாரா சம்பளம் காரணமாக தான் படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது. முதலில் நயன்தாரா இந்த படத்தில் நடித்த 15 கோடி ரூபாய் கேட்டதாகவும், தயாரிப்பாளர் அவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்று கூறியதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.



இயக்குனர் விஷ்ணு எடவன் நயன்தாரா மற்றும் தயாரிப்பாளரிடம் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நயன்தாரா 10 கோடி ரூபாய்க்கு இறங்கி வந்ததை அடுத்து தயாரிப்பாளர் ஓகே சொல்லி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த போது கூட லலித்துக்கு இந்த அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டதில்லை என்றும் ஆனால் இந்த படத்தில் அவருக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் புலம்பி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் விஷ்ணு எடவன் முயற்சியால் தற்போது நயன்தாரா சம்பள பிரச்சினை சுமூகமாக முடிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement