• Dec 26 2024

தனுஷ் இப்பவும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்காரு.. விவாகரத்துக்கு பின்னாடி மிகப்பெரிய ஏற்பாடு..??

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது மருமகன் தனுஷ் பற்றிய கிசுகிசு செய்திகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் தமக்கு விவாகரத்து வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதை அடுத்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் பல்வேறு விஷயங்கள் கசிய தொடங்கினர்.

அவர்களது வழக்கு விசாரணை கூடிய சீக்கிரமாகவே சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த விவாகரத்து விஷயமே ஒரு ஏற்பாடு தான் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


தற்போது 2கே கிட்ஸ் மத்தியில் சிட்டுவேஷன் ரிலேஷன்ஷிப் பற்றி வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது தன்னுடைய பார்ட்னர் தன்னுடன் எவ்வளவு தூரம் என்றாலும் பயணிக்கலாம். எவ்வளவு என்றாலும் சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு தடவை பிடிக்கல என்றால் அவங்க உடனே அவரை விட்டு விலகிவிட வேண்டும்.

இந்த மாதிரி தான் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தும்  சிட்டுவேஷன் ரிலேஷன்ஷிப் என்ற கோணத்தில் நடந்துள்ளதாம். அது மட்டும் இன்றி இவர்கள் இரண்டு பேரும் வீட்டிலையும் குழந்தைகள் முன்னாடியும் வழமை போல சகஜமாகவே காணப்படுகிறார்களாம். அவர்களுடைய மகன்களுக்கு கூட தங்களுடைய பெற்றோர் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை என்றும், அந்த அளவுக்கு இருவரும் சகஜமாகவே காணப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.


அதன்படி, நடிகர் தனுஷ் இந்த விவாகரத்து கோர என்ன காரணம் என்று பார்த்தால்,  இந்த விவாகரத்து விஷயமே ஒரு ஏற்பாடு தான் என கூறப்படுகிறது. 

மேலும் நேற்று வரைக்குமே தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் வாட்ஸ் அப் மூலம் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் தனுஷ் பெயரில் இருக்கும் பல கோடி சொத்துக்கள் கூட இன்றுவரையில் தனது மனைவி ஐஸ்வர்யா பெயரில் தான்வைத்து உள்ளாராம். அதை மாற்ற வேண்டாம் என்று கூட அவர் சொல்லி உள்ளார் என கூறப்படுகிறது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது தனுஷும் ஐஸ்வர்யாவும் தனது குடும்பத்துடன் வீட்டில் ஒன்றாகத்தான் இருப்பதோடு, அவர்கள் கூறிய விவாகரத்தும் ஒரு ஏற்பாடு என்றுதான் சொல்லப்படுகிறது. அதனால் இந்த விவாகரத்துக்கு பின்னால் ஏதோ ஒரு பெரிய பிளான் இருக்கு என்பது மட்டும் சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement