• Dec 26 2024

கங்குவா புது போஸ்டரில் இதை கவனிச்சு இருக்க மாட்டிங்களே! அதகள அப்டேட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் தான் கங்குவா.

இந்த படத்தில் பாபி தியோன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கங்குவா படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை பார்க்கும் போதே இந்த படம் மிரட்டும் என சூர்யாவின் ரசிகர்கள் வெறித்தனமாக கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை ஒட்டி இன்றைய தினம் கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த போஸ்டரில் ரெட்டை வேடங்களில் சூர்யா காணப்படுகிறார்.


தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் மற்றும் பிரபல இயக்குனர் லோகேஷ் இயக்கும் புதிய படம், நயன்தாரா நடிக்கும் புதிய படம், தனுஷ் நடிக்கும் ராயன் படத்தின் அப்டேட், ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 பற்றிய அப்டேட், அரண்மனை 4 படத்திலிருந்து வெளியான பாடல் என அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் பற்றிய அதகள அப்டேட்டுகள் இன்றைய தினம் வெளியானது.


இவ்வாறான நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறித்த போஸ்டரில் இரண்டு சூர்யாக்கள் இருக்கிறார்கள். ஒரு சூர்யா பீரியட் காலத்தில் இருப்பதுபோன்று கையில் கத்தியுடனும், இன்னொரு சூர்யா தற்காலத்துக்கேற்ப மாடர்ன் உடையில் கையில் துப்பாக்கியுடனும் இருக்கிறார்கள். இந்தப் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement