• Dec 25 2024

ஊர்ல எவன் டைவர்ஸ் ஆனாலும் தனுஷ் தான் காரணமா! இசைப்புயல் விவாகரத்து! வைரலாகும் மீம்ஸ்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்தி வாரத்து வாரம் நடந்து வருகிறது. இந்த லிஸ்டில் பலர் இருந்தாலும் ட்ரெண்டிங்கில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சையிந்தவி ஜோடி, நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி, தனுஷ்-அஷ்வரியா ரஜனி உள்ளிட்டோர் விவாகரத்து பேசுபொருளாக மாறியிருந்தது. 


இந்நிலையில் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் நேற்று இரவு ஒரு பேரிடியாய் வந்த அறிவிப்பு தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதியின் விவாகரத்து செய்தி.  திருமணமாகி 29 ஆண்டுகள் வாழ்ந்த இந்த ஜோடி தற்போது திடீரென விவாகரத்து முடிவை அறிவித்து இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த ஜோடிக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் இருக்கிறார்கள்.


தற்போது ஹாட் ட்ரெண்டிங் டாக் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி தான்.  இது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரத்தாக இருந்தாலும் நடிகர் தனுஷின் பெயரும் சோசியல் மீடியாவில் அடிபட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் யார் விவாகரத்து முடிவை அறிவித்தாலும் தனுஷின் பெயரை அதில் இழுத்துவிட்டு மீம் கிரியேட்டர்கள் கலாய்ப்பதுண்டு. 


எவன் டைவர்ஸ் பண்ணாலும் உன்னைத்தான் அடிப்பாங்க, அதுமட்டுமின்றி மெட்ராஸ் படத்தில் வரும் சுவரில் தனுஷின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதை போல் எடிட் செய்து, ஊர்ல யாருக்கு டைவர்ஸ் ஆனாலும் அண்ணனை தான் முதல்ல தேடுறாங்க என்று குறிப்பிட்டு போடப்பட்டுள்ள மீமும் டிரெண்டாகி வருகிறது. இதோ அந்த வைரலாகி வரும் மீம்ஸ்.


Advertisement

Advertisement