• Dec 26 2024

தனுஷ் திரைப்பயணத்தில் அதிக பிஸ்னஸ்... கேப்டன் மில்லர் பிஸினஸ் இத்தனை கோடிகளா?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என ஆரம்பத்தில் விமர்சிக்கப்படுபவர் தனுஷ். ஆனால் இப்போது இவரின் நடிப்பை பற்றி பாராட்டாத பத்திரிக்கையே இல்லை என்று தான் கூற வேண்டும். தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.


கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் விரைவில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரமாண்டமாக ரெடியாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது


இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது, இதில் தனுஷ் விஜயகாந்த் பாடல் எல்லாம் பாடி எல்லோரையும் கவர்ந்தார்.


தற்போது கேப்டன் மில்லர் படம் தான் தனுஷ் திரைப்பயணத்தில் அதிக அளவு பிஸினஸ் ஆன படம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை பிஸினஸ் ஆகியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement