• Dec 26 2024

இலங்கைப் பிரதமருடன் செல்பி எடுத்த கில்மிஷா! வைரலாகும் புகைப்படம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.  

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இறுதியாக ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.


அதன்படி, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டார். அவருக்கு உலகளவில் வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில், மீண்டும் தனது தாய் நாட்டிற்கு திரும்பிய கில்மிஷா, இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.


மேலும், மீண்டும் தனது தாய் நாட்டிற்கு திரும்பிய கில்மிஷா, தொடர்ந்தும் பல்வேறு விழாக்கள், பேட்டிகள் என கடும் பிசியாக நாட்டை சுற்றி வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement