• Dec 25 2024

ஜப்பானே வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற தனுஷ் திருமணம்.. போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக காணப்படும் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் இன்றைய தினம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருவதோடு மணமக்களுக்கு தமது வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றார்கள்.

பாரதிராஜாவின் இயக்கத்தில்  ஹீரோவாக அறிமுகமான நெப்போலியன், அதற்குப் பிறகு ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடிப்பில் மிரட்டி இருப்பார். அதன் பின்பு சினிமாவில் இருந்து சிறிது விலகி அரசியலில் கால் பதித்தார். எனினும் நெப்போலியன் தனது மூத்த மகன் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்காகவே சொந்த இடத்தை விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

d_i_a

தனது மகனின் குறையை பெரிதாக நினைக்காமல் அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை படிக்க வைத்து அவரை அழகு பார்த்து உள்ளார் நெப்போலியன். மேலும் திருமண வயதை எட்டிய தனுஷுக்கு ஏற்றார் போல அக்ஷயா என்ற பெண்ணையும் தெரிவு செய்து நிச்சயதார்த்தம் செய்தார்கள்.


தனுஷின் உடல் நிலை குறித்து பலர் விமர்சனங்களை முன்வைத்த போதும் அதற்கு மனம் தளராமல் இன்று அவர்களுடைய திருமணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார் நெப்போலியன். இதற்கு சினிமா பிரபலங்களும் முக்கியமான அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு உள்ளார்கள்.

இந்த நிலையில், தனுஷ் - அக்ஷயா ஜோடிக்கு இன்றைய தினம் சிறப்பாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அக்ஷயா சந்தன நிறத்தில் ஆன சேலையையும், தனுஷ் சிகப்பு நிற சட்டையையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்துள்ளார். இதன் போது தனுஷின் தாய் தாலியை எடுத்துக் கொடுக்க, சிறப்பாக அக்ஷயாவுக்கு தாலியை கட்டி மனைவியாக்கிக் கொண்டுள்ளார் தனுஷ். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement