நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் மேஜர் முகுந்தாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீசாக நடித்துள்ளார். இவர்கள் நடித்த அமரன் திரைப்படத்தினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தினை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பரிசாக கடந்த மாதம் 31 ம் திகதி இந்த அமரன் திரைப்படம் ரிலீசானது. இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்துள்ளது.
இந்த படத்தினை தயாரித்த நடிகர் கமலஹாசன் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் தக் லைப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் அவருடன் அமரன் திரைப்பட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Listen News!