• Apr 18 2026

குறட்டை விட்டு தூங்கிய டியரை தட்டித் தூக்கினாரா ரோமியோ? வெளியானது முதல் நாள் வசூல் விபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் மலையாளத்திலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில படங்கள் நேற்றைய தினம் வெளியாகின.

தமிழில் விஜய் அன்டனி நடித்த ரோமியோ படமும் ஜி.வி பிரகாஷ் நடித்த டியர் படமும் நேற்றைய தினம் வெளியானது. அத்துடன்  மலையாளத்தில் பகத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது டியர் மற்றும் ரோமியோ படத்திற்கான முதல் நாள் வசூல் பற்றிய விபரம் வெளியாகி உள்ளன.

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் கள்வன், ரெபெல் ஆகிய படங்கள்  அண்மையில் வெளியான நிலையில், தற்போது டியர் படம் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் இனி தேர்தலுக்குப் பிறகு தான் ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் படத்தின் முதல் நாள் வசூல் 50 லட்சத்திற்கும் குறைவு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விட்டு நடித்த இந்த படத்தை பார்க்க முதல் நாளிலேயே பெரிதாக கூட்டம் காணப்படவில்லையாம்.


அதேபோல விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.

எனினும் மலையாளத்தில் வெளியாகும் படங்கள் முதல் நாளிலேயே 7 முதல் 10 கோடி வரை வசூலித்து வருகின்ற நிலையில், ரோமியோ படம் பாக்ஸ் ஆபிஸில்  இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement