• Dec 26 2024

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து திடீரென விலகிய துருவ் விக்ரம்.. கவின் பட இயக்குனர் காரணமா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் நாயகன் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் என இரண்டு நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து துருவ் விக்ரம் திடீரென விலகி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கவின் உட்பட பலர் நாயகனாக நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கடைசியில் துருவ் விக்ரம் முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.



இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும்  கபடி விளையாட்டு வீரர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கும் துருவ் விக்ரம் இந்த படத்தை முடித்தவுடன் கவின் நடித்தடாடாபடத்தின் இயக்குனர் கணேஷ்பாபு இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

இந்த படத்தின் கதை துருவ் விக்ரமுக்கு பிடித்து விட்டதை அடுத்து மாரி செல்வராஜ் படத்தை முடித்ததும் கணேஷ் பாபு படத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஜேசன் சஞ்சய் மீண்டும் தனது முதல் படத்தின் நாயகனை தேட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement