• Dec 26 2024

’கேப்டன் மில்லர் 2’ படம் டிராப்.. இசைஞானி இளையராஜா காரணமா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்தகேப்டன் மில்லர்திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வசூலை குவித்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானாலும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது இந்த படம் லாபத்தை கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், அசல் பணத்தை எடுக்கவே திணறியதாகவும், பெரிய அளவில் லாபம் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்கேப்டன் மில்லர்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆகியோர் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படம் ட்ராப் என்று கூறப்படுகிறது.



இதற்கு காரணம்கேப்டன் மில்லர்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வசூல் செய்யாதது மட்டுமின்றி இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குவதற்கு அருண் மாதேஸ்வரன் ஒப்புக்கொண்டு உள்ளதை அடுத்துகேப்டன் மில்லர் 2’ படம் டிராப்பானதாக தெரிகிறது.

இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அருண் மாதேஸ்வரன் தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அருண் மாதேஸ்வரன் தரப்பிலிருந்து கூறப்பட்ட தகவலின் படிகேப்டன் மில்லர் 2’  படத்தை, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை முடித்த பிறகு தொடங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement