அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'ஜம்ப் கட்ஸ்' யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஹரி பாஸ்கர் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான லொஸ்லியா, ரயான் உள்ளிட்ட பலரின் நடிப்பில் காமெடி ரொமாண்டிக் படமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த லொஸ்லியா மற்றும் ஹரி பாஸ்கரின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் தேறுமா? தேறாதா? இந்த படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? இல்லையா? என்பதை விரிவாக பார்ப்போம்..
d_i_a
கல்லூரியில் படிக்கும் போது லொஸ்லியாவை துரத்தி துரத்தி காதலிக்கின்றார் ஹரி பாஸ்கர். ஆனாலும் அதற்கு லொஸ்லியா மறுப்பு தெரிவிக்கின்றார். அதன் பின்பு அவருக்கு சவால் விட்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்கின்றார். அந்தப் பெண்ணும் கடைசியில் இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள, விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஹரி பாஸ்கர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்கின்றார். ஆனால் அவரை சாரா காப்பாற்றி விடுகின்றார்.
இதை தொடர்ந்து ஒரு வீட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக ஹரிபாஸ்கர் செல்கின்றார், அங்கு லொஸ்லியாவை மீண்டும் பார்த்து அவரை மறுபடியும் காதல் செய்ய வைக்க போராடுகின்றார். இதில் அவருடைய போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.
இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் படத்தின் நீளம் அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றது போல் முன்வைக்கப்பட்டாலும் படத்தின் கருத்துக்கள் அனைத்தும் இரு தசாப்தத்திற்கு முன்பாக கொண்ட மனநிலையை காணப்படுவதும் ஒரு பலவீனம்.
மேலும் இந்த படத்தில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்களும் எளிதில் யூகிக்க கூடியதாகவே காணப்படுகிறது. நவீன யுக காதல் பற்றிய புரிதல் அற்ற அணுகுமுறை இரட்டை அர்த்தத்தில் ஆன காமெடிகள் போன்றவை நெகட்டிவ் ஆக உள்ளன..
Listen News!