• Oct 26 2024

இயேசு மது குடித்தாரா? சர்ச்சை பேச்சு கண்டனத்திற்கு பின் விஜய் ஆண்டனி விளக்கம்..!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பன் முகத் திறமை கொண்டு வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. 

'சுக்ரன்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.தொடர்ந்து நான் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனானார். இதுவரையில் 20ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனை இரண்டாம் பாகம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட் ஆனது.

இவரது மகளின் இறப்பிற்கு பின் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் விஜய் ஆண்டனி, இறுதியாக நடித்த படம் தான் 'ரோமியோ' . இதன் போஸ்டர் அண்மையில் வெளியானது.


'ரோமியோ' பட நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஜீசஸ் கூட மது குடித்ததாக பேசி இருந்தார். இந்த விடயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஇருந்தது.

இந்த நிலையில், ஜீசஸ் மது குடித்தார் என விஜய் ஆண்டனி பேசியதற்கு எதிராக தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதாவது, 'ரோமியோ'  படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அதன் கதாநாயகி மிருளாளினி சரக்கு அடிப்பது போல் இருந்தது. இது தொடர்பில் செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, மது என்பதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்றுதான். ஆரம்ப காலத்தில் இயேசு கிறிஸ்து கூட திராட்சை ரசத்தை குடித்துள்ளார். ராஜராஜ சோழன் காலத்தில் சோமபானம் குடித்துள்ளனர். இவ்வாறு காலத்துக்கு காலம் பெயரை மாற்றி பயன்படுத்துகிறோம் என தெரிவித்து இருந்தார்.


இவ்வாறு விஜய் ஆண்டனி கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த அறிக்கையில்,

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம். உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரன் ஆகிய இயேசு கிறிஸ்து.


கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவு படுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இன்றி திராட்சை ரசத்தை மதுவுக்கு  ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொது வெளியில்  பேசி, கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில் அவர் வீட்டுக்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில்,

நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது... என்று தனது பக்க நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளார் விஜய் அன்டனி.


Advertisement