• Jan 01 2025

ஸ்ருதி மனசு வைக்கலையே... கமல் தன் மகளையே மேடையில் அசிங்கப்படுத்தி பேசினாரா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நேற்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில்  படக்குழுவினர் உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம், திடீரென நடைபெற்ற கிரேன் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், நிறுத்தப்பட்டது. அதன் பிறகு விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை இணைந்து உருவாக்கியது. அதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு கமலஹாசன் நன்றியும் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்பட விழாவில் 'ஸ்ருதி எல்லாம் மனசு வச்சிருந்தா நான் எப்பவோ தாத்தா' என கமலஹாசன் தனது மகள் ஸ்ருதியை நேரடியாகவே தாக்கி பேசி இருந்தார்.தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.


அதாவது ஸ்ருதிஹாசன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒவ்வொரு காதலனையும் பிரேக் அப் செய்து வருவதால் அவர் கல்யாணம் ஆகாமல் இருக்கின்றார். இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியே ஸ்ருதியை மேடையில் அசிங்கப்படுத்தி விட்டார் என நெட்டிசன்கள் கமலஹாசன் பேசியதை வைரலாக்கி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement