• Dec 29 2024

இது தான் லாஸ்ட்.. ஆனா குணசேகரனும் ஈஸ்வரியும் மிஸ்ஸிங்.!! வைரல் போட்டோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

2022 ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை கோலங்கள் என்ற மெகா ஹிட் அடித்த தொடரை இயக்கிய திருச்செல்வம் இயக்கியிருந்தார்.

குணசேகரன் என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தோடு அந்த வீட்டில் அடிமைப்பட்டு கிடக்கும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பந்தம், குணசேகரனின் கட்டுப்பாடு, பிற்காலத்தில் பெண்கள் துணிந்தவர்களாக எவ்வாறு உருவெடுத்தார்கள்? அவர்களுடைய  எதிர்காலம் எப்படி மாறியது என்பது தொடர்பில் அதிரடி திருப்பங்களுடன் 700 எபிசோடுகளையும் கடந்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் எதிர்நீச்சல்.


தற்போது எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரப் போகிறது என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு பக்கம் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு காரணம் இந்த சீரியலை தற்போது பெண்களுக்கான கதைக்களம் இறுதியில் தான் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போட்டோ ஒன்று வெளியாகிய வைரலாகியுள்ளது. அதில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக உட்கார்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

குறித்த புகைப்படத்தில் இதில் நடித்த அனைவரும் இருப்பதோடு அப்பத்தாவும் உள்ளார். ஆனால் இந்த போட்டோவில் குணசேகரனையும் ஈஸ்வரியையும் மட்டும் காணவில்லை.

 

Advertisement

Advertisement