• Dec 27 2024

தனுஷ் உட்பட 7 பேரை காதலித்தாரா கமல் பொண்ணு? சமந்தா கணவரும் சிக்கினாரா? லிஸ்ட் இதோ..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு மட்டுமில்லாமல் சிறந்த நடிகையாகவும், பாடகியாகவும் காணப்படுபவர் தான் ஸ்ருதி ஹாசன்.

அண்மையில் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள். இனிமேல் இனிமேல்.. என்ற அந்த பாடல் பல்வேறு இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் கிசுகிசுக்களில் சிக்குவது  வழமையாகவே காணப்படுகிறது. அது போலவே தற்போது ஸ்ருதிஹாசன் நான்கு வருடங்களாக காதலித்து வந்த தனது காதலனை பிரிந்து உள்ளதாக  தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது பிரபல நடிகையாக காணப்படும் ஸ்ருதிஹாசன் இதுவரையில் 7 பேரை காதலித்து பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் காதலித்த ஏழு பேரும் யார் யார் என பார்ப்போம்.


அதன்படி தெலுங்கு படம் ஒன்றில் சித்தாத்துடன் நடிக்கும் போது இவர்கள் காதலித்து டேட்டிங் செய்து வந்தார்கள் என டோலிவுட் திரை உலகில் பேசப்பட்டது. 

இடைத்தொடர்ந்து தனுசுடன் 3 திரைப்படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகள் நடித்த போது ஸ்ருதி அவருடன் டேட் செய்ததாகவும் ,இதனாலே ஸ்ருதி - ஐஸ்வர்யா இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இவர்கள் நட்பில் விரிசல் விழுந்ததாகவும் கூறப்பட்டது. இதுவும் தனுஷின் விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் என பேசப்பட்டது.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் சமந்தாவின் கணவரான நாக சைதன்யாவும் ஸ்ருதியின் காதல் வலையில் விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அது ஒரு சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளதாம்.


அவரை பிரேக்கப் செய்த அடுத்த ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் டேட் செய்து வந்துள்ளார். எனினும் அவர்கள் இருவரும்  நண்பர்கள் என ஸ்ருதி மற்றும் சுரேஷ் ரெய்னா தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து 2014 ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனாலும் அது பிரேக்கப் ஆனது. அதன்பின் சாந்தணு ஹசாரிக்கா என்கிற டூன்டூல் கலைஞரை ஸ்ருதி ஹாசன் டேட் செய்து வந்தார். ஆனாலும் அது நிலைக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை லண்டனை சேர்ந்த இசை கலைஞர், மைக்கேல் கோர்சலே என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரும் திருமண செய்து கொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில், தங்களில் பர்சனல் காரணங்களுக்காக பிரிவதாக தெரிவித்தனர்.

எனவே தற்போது இறுதியாக ஸ்ருதி காதலித்த மைக்கேல் கோர்சலே என்பவருடன் மீண்டும் இணைவாரா? இல்லையா? என பொறுத்து இருந்து பார்ப்போம். 




Advertisement

Advertisement