• Apr 24 2026

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு ஆடிஷன் வச்சுத்தான் எடுத்தாங்களா? புதுப்புரளியை கிளப்பிய மாயா! கேள்விக்குள்ளான வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 79 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இந்த முறை சீசனில் தான் அதிக வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதன்படி வந்த ஐவரில் தற்போது தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் தான் தமது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.


பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்டு பாதி நாட்களில் இவர்கள் உள்ளே வந்து இருந்தாலும், மக்கள் மத்தியில் விரைவாகவே அமோக வரவேற்பை பெற்றனர்.

அதுமட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் வந்த பிறகு தான் ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் அழுது புலம்பிய அர்ச்சனா போக போக ஆட்டத்தை புரிந்து கொண்டு தற்போது அனைவரையும் அடக்கி ஆளும் ஆவேச அர்ச்சனாவாக உருமாறிவிட்டார்.

இந்த நிலையில், பிக் பாஸ்ல அர்ச்சனாவை ஆடிஷன் வச்சு தான் எடுத்தாங்களா என மாயா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே மாயாவுக்கும் அர்ச்சனாவுக்கு இடையில் மனக்கசப்பு இருக்கும் நிலையில், மாயா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement