• Dec 26 2024

கையில் பேரல் துப்பாக்கியுடன் வெறித்தனமாக போஸ் கொடுத்த நடிகர் சூரி! வேற லெவலில் தயாராகும் சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விடுதலை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. வழக்கமாக காமெடி வேடங்களில் நடித்து வந்த சூரி, இப்படத்தில் அதிலிருந்து வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. இதனை அடுத்து கொட்டுக்காளி என்கிற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் வினோத் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் அண்மையில் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகக் காத்திருக்கின்றது.


இதுதவிர துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் ஹீரோவாக சூரி நடித்து வருகின்றார். இதில் ரோஷினி, பிரிகிடா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்து மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் உருவாகி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் சூரி ஆக்கிரோஷமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதில், நடிகர் சூரி டபுள் பேரல் துப்பாக்கி உடன் வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ளார். இதனைபார்த்த ரசிகர்கள், இதுதான் உங்களுக்கு சரியான ரூட் அப்படியே போயிடுங்க பாஸ் என்று தமது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement