• Jan 06 2025

மத கஜ ராஜாவில் நடித்த இத்தனை பேர் உயிரிழப்பா? வெளியான தகவலால் அதிர்ச்சி

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் தான் மத கஜ ராஜா. இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி நடித்துள்ளதோடு இந்த படத்தில் சந்தானம் காமெடியனாக கலக்கியிருந்தார்.

2013 ஆம் ஆண்டு மத கஜ ராஜா திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல பிரச்சனைகளால் தற்போது 12  ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாக உள்ளது.

எதிர்வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு மத கஜ ராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு ஏற்கனவே 10 படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் 11வது படமாக விஷாலின் படமும் இணைந்துள்ளது.


இந்த நிலையில், மதகஜராஜா படத்தில் நடித்த முக்கிய பிரபலங்கள் ஐந்து பேர் தற்போது உயிருடன் இல்லை என்ற தகவல் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. 

அதன்படி மதகத ராஜாவில் நடித்த மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு மற்றும் சீனு மோகன் ஆகியோர் தற்போது உயிரோடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement