• Dec 26 2024

ஆண்டவர் பணத்தையும் குடுத்து நடிக்க புள்ளையும் குடுத்தா..? வாட் இட் திஸ் லோகி? கிழித்த நடிகை

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் மாநகரம்,கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றார்.

நடிகர் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தையும், விஜயை வைத்து லியோ படத்தையும் இயக்கி வெற்றி படமாகவும், வசூலில் சாதனை படைத்த படங்களாகவும் உருவாக்கி இருந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமல், சூர்யா என அனைவரையும் வைத்து படம் இயக்கிய லோகேஷ், தற்போது தானே கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் இசையமைத்த 'இனிமேல்' என்ற பாடலில் ஹீரோவாக எண்ட்ரியாகியுள்ளார் லோகேஷ். இதற்கான டீசரும் நேற்றைய தினம் வெளியாகி  இருந்தது.


குறித்த 'இனிமேல்' பாடல் டீசரில் நடிகை ஸ்ருதிஹாசனுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகை காயத்திரி குறித்த பாடலின் டீசரை தனது எக்ஸ் தள பக்கத்தில் ஷேர் பண்ணி 'உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு... வாட் இட் திஸ் மா லோகேஷ்' என ட்விட் பண்ணி உள்ளார். தற்போது இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நடிப்பதற்காக லோகேஷுக்கு பணத்தையும் கொடுத்து, பெத்த பிள்ளையும் கொடுத்தா இப்படி பண்ணிட்டாரே என்பது போலவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement