• Dec 26 2024

இந்த ஷைனிங் முதுகுக்கு பின்னாடி தான் விஷயமே இருக்கு! இன்ஸ்டா வீடியோவில் நச்சுன்னு காட்டிய சமந்தா

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை சமந்தா. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.

2017 ஆம் ஆண்டில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா,  கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து  பெற்று  அவரை பிரிந்து விட்டார்.

அதற்குப் பின் தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு,  மயோசிடிஸ் நோய் ஏற்படவே மிகவும் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.


தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.


அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகவிருக்கும் வெப் சீரிஸ்கள், ஷோக்கள் உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை சமந்தா உடுத்திய ஆடையின்  புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக  காணப்பட்டது.


இந்த நிலையில், நடிகை சமந்தாவுக்கு வடிவமைக்கப்பட்ட ஆடை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதற்கான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ குறித்த வீடியோ,


Advertisement

Advertisement