• Apr 30 2026

விஜய் சேதுபதியின் விடுதலை வெறியாட்டம் மக்களிடம் எடுபட்டதா? முதல் நாள் கலெக்சன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர்  நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விடுதலை 2. இந்த திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி  மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

விடுதலை படத்தின் முதலாவது பாகம் சூரியை மையப்படுத்தியதாக காணப்பட்டது. இதன் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கேரக்டரில் அவரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அவருடைய தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

d_i_a

விடுதலை படத்தின் முதலாவது பாகத்தில் சூரியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதிலும் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக அவர் எடுத்து அவதாரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படம் சூரியின் கேரியரில்  மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.


இந்த நிலையில், விடுதலை 2 ரிலீஸ் ஆகி அதற்கான முதல் நாள் வசூல் விபரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரிலீஸ் ஆகி உலக அளவில் சுமார் 8 கோடிகளை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விடுதலை 2 பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இனி வரும் விடுமுறை நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement