• Dec 24 2024

ரோகிணியை தரதரவென இழுத்து வீசிய விஜயா..! மனோஜ் எடுத்த சபதம்? மீனாவுக்கு தோன்றிய பேராசை..

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜூம்  ரோகினியும் ஸ்ருதி ரவியிடம் பண உதவி பண்ணுமாறு கேட்கின்றார்கள். அவர்கள் தங்களிடம் காசு இல்லை என்று சொல்லவும், ஸ்ருதியின் அப்பாவிடம் கேட்டு வாங்கி தருமாறு மனோஜ் சொல்லுகின்றார். ரோகினியும் கடனாகத்தான் கேட்கிறோம் என சொல்லுகிறார்கள்.

ஆனால் ரவி தன்னால் கேட்க முடியாது. எனக்காகவே நான் கேட்க  மாட்டேன். உனக்காக கேட்கணுமா என்று சொல்ல, தான் வீடு வாங்க வேண்டும்.. எப்படியாவது பணத்தை வாங்கி தா என்று மனோஜ் கூறுகின்றார். ஆனாலும் ரவி தன்னால் காசு வாங்க முடியும் என்றால் நான் ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணி இருப்பனே என்று சொல்லி அனுப்புகிறார்.

இதனால் மனோஜூம் ரோகிணியும் உள்ளே வந்து நாம வீடு வாங்குவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என்று சபதம் எடுக்கின்றார்கள். 

d_i_a

அதன்பின் ரோகிணி தூங்கும் போது மலேசியா மாமாவுடன்   கதைத்ததாக வித்யாவுடன் கதைத்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்து, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் ரோகிணியை எழுப்பி என்னையே ஏமாற்றுறீயா? என திட்டி தீர்த்ததோடு ரோகிணியை தர தரவென இழுத்துக் கொண்டு அங்குள்ள ஸ்விம்மிங் பூலில்  தள்ளி விடுவது போல கனவு கண்டு ரோகிணி பயப்படுகின்றார்.


இன்னொரு பக்கம் மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கும் போது, மீனா தனக்கு இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும் என்று ஒரு ஆசையும் இல்லை. கிராமத்தில் திண்ணை வீட்டில் எல்லோரும் குடும்பமாக ஒன்றாக இருந்து வாழ வேண்டும் என்று தனது விருப்பத்தை சொல்லுகின்றார்.

அதேபோல ஸ்ருதியும் தனக்கு இப்படி ஒரு வீட்டில் வாழ விருப்பமில்லை ஏனென்றால் நான் பிறந்து வளர்ந்தது இப்படி ஒரு வீட்டில் தான். எனக்கு அப்பார்ட்மெண்ட்ல வாழனும் என்று ஆசை.. அங்க தான் நிறைய பிரண்ட்ஸ் இருப்பாங்க.. நிறைய செலிப்ரேட் பண்ணலாம் என்று தனது ஆசையை சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து ஜீவா முத்துவுக்கு போன் பண்ணி நாளைக்கு ஏர்போர்ட்டில் வந்து பிக்கப் பண்ணுமாறு சொல்லுகின்றார். அதேபோல முத்துவும் ஜீவாவை ஏர்போர்ட்டில் பிக்கப் பண்ணுகிறார். 

இதன் போது ஜீவா தான் போன முறையை ரெஜிஸ்ட்ரேஷன் விஷயமாகத்தான் வந்தேன்.. ஆனால் என்னிடம் 30 லட்சம் ரூபாயை இரண்டு பிராடுகள் கட்டாயப்படுத்தி வாங்கி விட்டார்கள் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement