• Dec 25 2024

நான் சொன்னப்ப நம்பினீங்களா? தனுஷ் பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா.! வைரல் பேட்டி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைக்குறிய விடயமாக காணப்படுவது நயன்தாரா தனுஷுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான். நயன்தாராவின் திருமண டாக்குமெண்ட் தாமதமானத்திற்கு காரணம் தனுஷ் தான் என்றும், மூன்று நிமிட வீடியோவுக்கு 10 கோடி ரூபாய்க்கு கேட்கின்றார் என்றும்  நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனுஷ் மீது குற்றம் சாட்டி இருந்தார்.

இதை தொடர்ந்து நயன்தாராவுக்கு ஆதரவாக பல நடிகைகளும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள். ஆனாலும் இதே தப்பத் தான் நீங்களும் உங்களுடைய புருஷனும் செஞ்சீர்கள் என்று பிரபல இயக்குனர் குற்றம் சாட்டியிருந்தார். அதாவது விக்னேஷ் சிவன் வைத்துள்ள படத்தின் டைட்டில்  தன்னுடையது என்றும், நடுத்தர இயக்குனர் என்ற காரணத்தினால் தன் மீது அதிகாரம் செலுத்துவதாகவும் கடவுள் முன்னிலையில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் எனவும் குறித்த இயக்குனர் பதிலடி கொடுத்திருந்தார்.

d_i_a

இந்த நிலையில், நயன்தாரா தனுஷுக்கு இடையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பலரும் இரண்டு பக்கமும் உள்ள நியாய தர்மத்தை பற்றி தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் சுசித்ராவும் நயன்தாராவுக்கு ஆதரவாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், தான் இந்த விஷயம் தொடர்பில் மிகவும் லேட்டாக தான் பார்த்து தெரிந்து கொண்டேன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்த போது ஏகப்பட்ட மெசேஜ்கள் குவிந்து கிடந்தன. அதை நீங்க சொன்ன போது யாரும் நம்பவில்லை இப்போது நயன்தாரா அறிக்கையை வெளியிட்டு உள்ளார் என்று சொல்லி இருந்தார்கள்.

நயன்தாரா எடுத்த முடிவு சரி. ஆனால் அவருக்கு ஆதரவாக குரல்  கொடுத்த நடிகைகளும் லைக் மட்டும் போடாமல் அவர்களுடைய கருத்துக்களையும் பதிவிட வேண்டும் என்று சுசித்ரா சொல்லியுள்ளார்.

மேலும் நயன்தாராவுக்கு இருக்கும் துணிச்சல் பிற நடிகைகளுக்கும் இருக்க வேண்டும். எல்லோரும் தனுசுடன் பணியாற்றியவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என சுசித்ரா கூறியுள்ளார். தற்போது சுசித்ரா வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement