• Dec 25 2024

என்ன நடந்தாலும் பாக்கியா குடும்பம் திருந்த சான்ஸ் இல்ல.. ராதிகா எடுத்த அதிரடி முடிவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.

அதில் பாக்கியா வீட்டில் எல்லாரும் கோபியை போலிஸுக்கு பிடித்து கொடுத்த படியால் கோவத்தில் காணப்படுகிறார்கள். அதில் எழிலுக்கும் செழியனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.

இதனால் நீ இப்படி எல்லாம் பண்ணுவா என்று தெரிஞ்சும் அப்பா உனக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தார் பாரு என உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் கோவப்பட்ட எழில் போதும் நிறுத்து என செழியனை திட்டுகிறார்.

d_i_a

மேலும் பட பூஜைக்கு அம்மாவை வரக் கூடாது என்று சொன்னது அந்த ஆளு தான் என எழிலும் உண்மையை போட்டு உடைக்கிறார். இதைக் கேட்டு பாக்கியா, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றார்கள்.


மறுபக்கம் கமலா ராதிகாவிடம் கோபியை வெளியே எடுக்க வருமாறு அழைக்கிறார். ஆனால் ராதிகா அவருக்காக போலீஸ் ஸ்டேஷன் வாசற்படி மிதிக்க மாட்டேன் என உறுதியாக கூறுகிறார்.

அதேபோல ஈஸ்வரியும் என்ன தான் இருந்தாலும் அவனை போலீசில் பிடித்து கொடுக்க வேண்டுமா என  பாக்கியாவிடம் கேட்கிறார். இதனால் அவர் செய்த தப்புக்கு தண்டனை கிடைச்சே ஆகணும் என  உறுதியாக இருக்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement