• Dec 26 2024

ஆண்டவர் என்பதால் அகங்காரம் வந்ததா...விஜய், ரஜனி கூட இப்படி செய்ததில்லை... புளூ சட்டை மாறன் வைரல் டுவிட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமலஹாசன் நேற்று தனது 69 வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். நம்மவர் 69 எனும் பெயரில் பிறந்தநாள் விழா பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவில் நடிகர் கமல் நடந்து கொண்ட விதம் தொடர்பாக புளூ சட்டை மாறன் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  


2023.11.07 அன்று நடிகர் கமலஹாசன் தனது 69வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அந்த விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.  கமலுடன் இருந்து பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் கமல் நம்மவர் 69ல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை சந்திக்கும் முகமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் ரசிகர்கள் , பொது மக்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வரும் போது கமல் தள்ளி நின்று வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்கள் முன் வணக்கம் செலுத்தியுள்ளார்.   


இந்த நிகழ்வை பார்த்த புளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். நம்மவர் 69' எனும் தனது பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்த கமல்.குறுக்கே தடை அமைத்து. வணக்கம் மட்டும் போட்டார் நம்மவர். அன்புடன் கைகுலுக்க நினைத்த ஒருவரை கூட தொடவில்லை. ரஜினி, விஜய் ஆகியோர் மக்கள் மற்றும் ரசிகர்களை அருகில் நிற்கவைத்து போட்டு எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் கைகுலுக்கினர். 'மக்களிடையே இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்திருக்கும் கமல்... பொதுவாழ்விற்கு வந்து சேவை செய்து.... அப்படியே  அறுத்து தள்ளிட்டாலும்...'   என்று நினைக்க வைத்துள்ளார் என டுவிட் செய்துள்ளார். 


இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் போட்ட பதிவுக்கு நிறைய ரசிகர்கள் எதிர்மறையான பதில்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement