• Dec 28 2024

கோபியை தனியாக ரூமுக்கு அழைத்த பாக்கியா.? ஈஸ்வரியின் ஆசை நிறைவேறுமா?

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், குலதெய்வம் கோயிலுக்கு சென்றவர்கள் மீண்டும் வருகின்றார்கள். இதன் போது வழியில் நின்று காபி குடித்து விட்டு போகலாம் என்று ஈஸ்வரி சொல்ல, சரி என செழியன் காபி வாங்க போகின்றார். 

அந்த நேரத்தில் ஈஸ்வரி  நீ இப்பத்தான் சந்தோஷமாக இருக்கிறா.. இப்படியே என் கூட இருந்திரு.. உன் வாழ்க்கையில் ராதிகா வந்திருக்கக் கூடாது.. நீயும் பாக்யாவும் சேர்ந்து வாழனும் என்று அப்பா நினைத்தார். 

ஆனா அதுக்கு முதல் அவர் போய்விட்டார்.. நானும் இப்ப அதைத்தான் நினைக்கிறேன். என்ட ஆசையும் நிறை வேறாமல் போய் சேர்ந்திடுவனோ தெரியல என்று ஈஸ்வரி சொல்லுகின்றார். அதற்கு கோபி இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று சமாதானம் சொல்கின்றார்.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்தவர்களுக்கு காபி போட்டு தருமாறும், நான்கு காபி போடுமாறும் ஈஸ்வரி சொல்லுகின்றார். கோபி  தனக்கு வேண்டாம் என சொல்லுகின்றார். ஆனாலும் பாக்கியா கோபிக்கும் சேர்த்து காபி போட்டு கொடுத்துவிட்டு நான் உங்களுடன் பேச வேண்டும் என்று சொல்லுகின்றார்.

இதைக்கேட்டு ஈஸ்வரி சந்தோஷப்பட்டு ரூமுக்கு போய் தனியாக இருந்து பேசுங்கள் என்று சொல்ல, கோபியும் அங்கு செல்லுகின்றார். இதன் போது பாக்யா ட்ரிப் எப்படி இருந்தது என்று கேட்க, ரொம்ப நன்றாக இருந்தது என்று சந்தோஷமாக பதில் சொல்லுகின்றார் கோபி.

இதனால் எப்போதும் நீங்கள் சுயநலமாக தான் இருப்பீங்களா? ராதிகா வீட்டை காலி பண்ணிட்டு போகப்போறா.. என்ற உண்மையை சொல்லுகின்றார். இதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகின்றார். இப்போது நீங்க ராதிகாவை பார்க்கவில்லை என்றால் இனிமேல் பார்க்க முடியாது என்று சொல்லிச் செல்கின்றார்.

இறுதியில் பாக்கியா ரூமில் இருந்து வெளியே வர என்ன பேசினீர்கள் என்று ஈஸ்வரி கேட்கின்றார். அதனை கோபி வந்து சொல்லுவார் என்று பாக்கியா சொல்லுகின்றார். 

வெளியில் வந்த கோபி தான் ராதிகாவை பார்த்து விட்டு வருவதாக சொல்ல, ஈஸ்வரி வேண்டாம் என தடுக்கின்றார். ஆனாலும் ஐந்து நிமிடம் வந்து விடுகின்றேன் என்று கோபி செல்கின்றார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement