விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று யார் எலிமினேஷன் ஆகுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தே இருக்கும், அதே நேரம் போட்டியாளர்களிடத்தே யார் வெளியேறுவார் என்ற பதற்றம் இருக்கும் இப்படி இருக்க முதல் ப்ரோமோ ரிலீஸாகி உள்ளது.
இன்று போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி "உங்கள் வீட்டு உறவுகளை பார்த்திங்க, பேசுனீங்க, அன்பை பரிமாறுனீங்க அதைப்பற்றி சொல்லுங்க, உங்கள் குடும்பத்தினர் வந்த பிறகு உங்களுக்கு ஒரு பூஸ்ட் கிடைச்சி இருக்கும் இதுக்கு அப்புறம் எப்படி விளையாட போறிங்க என்னமாதிரியான எண்ணங்கள் இருக்கு என்பதையும் சொல்லுங்க" என்றும் சொல்கிறார்.
மேலும் " உங்க குடும்பத்திரன் சொல்ல கூடாத சில விஷயங்கள் எல்லாம் சொல்லி இருப்பாங்க, அதையும் சொல்லுங்க. குடும்பத்தினர் வந்தாங்க பூஸ்ட் கொடுத்தாங்க என்பதற்காக எலிமினேஷன் இருக்காது என்று இல்லை இருக்கு" என்று அது குறித்து ஆரம்பிப்பதோடு ப்ரோமோ முடிவடைகிறது. இன்று யார் எலிமினேட் ஆகா போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!