• Dec 26 2024

Dinesh ஓட Love-அ பத்தி பேச Vichitra யாரு,காசுக்காக Cheap-அ காட்டிகிறாங்க!!- பிக்பாஸ் ஷோவை கழுவி ஊற்றும் முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

100 நாட்கள் ஓடும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ஹவுஸ்மேட்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ  பினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் யார் வெற்றி பெறப் போகின்றார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இது ஒரு புறம் இருக்க நடிகை வனிதா அந்த நிகழ்ச்சியை ரிவியூ செய்து வருகின்றார்.இவர் நடிகை காஜல் பசுபதியுடன் சேர்ந்து ரிவியூ கொடுத்திருக்கின்றார். அதில் காஜலிடம் மணி ,ரவீனா கேம் பார்க்க எப்பிடி இருக்கு என்று கேட்கின்றார். அதற்கு காஜல்,பார்க்கவே ரொம்ப எரிச்சலாக இருக்கு இவங்களை அனுப்பிட்டு விக்ரமை உள்ளே இருக்க விட்டிருக்கலாம்.


அதே மாதிரி டைட்டில் வின்னராக விசித்ரா ஆகனும் என்று தான் ஆசை. ஒரு வயசு வந்தவங்களினாலும் இந்த டைட்டிலைப் பெற முடியும் என்ற ஒரு எடுத்துக் காட்டாக இருக்கும் என்று சொல்கின்றார்.அதற்கு வனிதா இன்டைக்கு விசித்ரா தினேஷின் பர்சனல் லைப் பற்றி பேசினது ரொம்பவே தப்பு, அவங்க அப்பிடிப் பேசி இருக்கக் கூடாது என்றும் வனிதா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement