• Oct 26 2024

ஹாஸ்பிட்டலில் வைத்து வடிவேலு என்னை அடித்தார், லெட்டர் எழுதி வாங்கிக் கொண்டாரு- தனக்கு நிகழ்ந்த அவமானத்தை கூறிய சுகுமார்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில்  கடந்த 2004ம் ஆண்டு வெளியான காதல் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் சுகுமார்.இந்தப் படத்தில் பரத்தின் நண்பனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். 

இதனைத் தொடர்ந்து சில படங்களில் மட்டும் நடித்த இவர் தற்பொழுது படவாய்ப்பில்லாததால் சினிமாவை விட்டு விலகியுள்ளார். இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் சில விஷயங்கள் குறித்து ஓபனாகப் பேசியுள்ளார்.அதில்,வடிவேலு குறித்தும் கூறியுள்ளார்.


அதாவது, 2000ம் ஆண்டு நான் சினிமாவிற்கு வந்த போது வடிவேலு ரொம்ப பீக்கில் இருந்தார். பல மேடை நிகழ்ச்சிகளில் அவரைப்போலவே செய்து இருக்கிறேன். இதனால், பல கம்பெனிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது கலகலப்பு என்ற படத்தில் நான் வடிவேலு போலவே நடித்தேன். அந்த நேரத்தில், மானஸ்தான் படப்பிடிப்பின் போது வடிவேலுவிற்கு காலில் அடிப்பட்டுவிட்டதால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அவருக்கு டூப்பாக நடிக்க என்னை அழைத்தார்கள். 

ஆனால், நான் அப்படி நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த தகவல் மருத்துவமனையில் இருக்கும் வடிவேலுவின் காதுக்கு சென்றது.அப்போது முத்துக்காளை மற்றும் போண்டா மணி இருவரும், வடிவேலு உங்களை பார்க்க வேண்டும் என்று அழைத்து சென்றார்கள். நானும் அவரை பார்ப்பதற்காக ஆசையாக சென்றேன். 


ஆரம்பத்தில் நன்றாக பேசிக் கொண்டிருந்த வடிவேலு, முத்துக்காளை மற்றும் போண்டா மணியை வெளியில் அனுப்பிவிட்டு ரூமில் என்னிடம் பேசினார். அப்போது, வடிவேலு என்னை மாதிரியே நடிப்பேனு சொல்லி, எல்லா கம்பெனியிலும் சான்ஸ் கேட்குறியாமே என்று சொல்ல அருகில் இருந்து சிங்கமுத்து மற்றும் உடன் இருந்த 7 பேர் என்னை திடீரென அடித்தனர். 

நான் சுதாரிப்பதற்குள் அனைவரும் சரமாரியாக அடித்துவிட்டனர்.சட்டை பட்டன் எல்லாம் அறுத்து என்னை செய்வது என்று தெரியாமல் அழுது கெஞ்சி நான் ஊருக்கே போய்விடுகிறேன் என்றேன். இவனை இப்படியே வெளியில் விட்டால், பத்திரிக்கையில் எதையாவது சொல்லிவிடுவான் என நினைத்துக்கொண்டு என்னிடம் எழுதிவாங்கினார்கள். 

அதாவது என் தங்கையின் படிப்பு செலவுக்காக உதவி கேட்டு வடிவேலு அண்ணானை பார்க்க வந்தேன் அவர் எனக்கு பத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாரு என்று எழுதி வாங்கிக் கொண்டார்கள். அந்த கடிதம் இன்னமும் வடிவேலுவிடம் இருக்கு. வெளியில் இருந்த போண்டா மணி,முத்துக்காளை இருவரும் என்னைப்பார்த்துவிட்டு மன்னித்துவிடு என்று கண்கலங்கினார்கள் என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement