• Apr 19 2026

''தேசிய விருது கிடைக்கும்" பாரதிராஜாவின் வாழ்த்தில் திக்குமுக்காடிய ராதிகா

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான "தாய் கிழவி" திரைப்படம் தற்போதும் இணைய தளங்களில் வைரலாக காணப்படுகிறது.  

கடந்த பிப்ரவரியில் வெளியான இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் நடித்த 'பவுனு தாய்' கதாபாத்திரம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர கட்டிப்போட்டது. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் வெளியான இந்தப் படம் விமர்சன, வசூல் என இரண்டு அளவிலும் வெற்றி கண்டது.

தாய் கிழவி படத்தைப்  பார்த்த கமல் ஹாசன், ராதிகாவின் நடிப்பை நேரில் பாராட்டி கட்டிப்பிடித்து வாழ்த்தினார். மேலும் "இந்தப் படத்தை பாரதிராஜா கண்டிப்பாக பார்க்க வேண்டும்" என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், தாய் கிழவி படத்தின் வெளியீட்டு நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக படம் பார்க்க முடியாத பாரதிராஜா, சமீபத்தில் படத்தை பார்த்துள்ளார்.. இதையடுத்து ராதிகா அவரை இல்லத்தில் நேரில் சந்தித்து உடல்நிலை விசாரித்தார்.

இதன் போது பாரதிராஜா ராதிகாவிடம்,  "படம் நன்றாக உள்ளது. உனக்கு தேசிய விருது கிடைக்கும்'' என வாழ்த்தியுள்ளார்.

இதைக் கேட்ட ராதிகா உணர்வுபூர்வமாக "அந்த விருதை பெற்றால், உங்கள் கால்களில் வைத்து வணங்குவேன்" எனத் தெரிவித்துள்ளார்.இந்த நெகிழ்வான சந்திப்பின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

Advertisement

Advertisement