சினிமா உலகில் விஜய்க்கு திரைக்கு வெளியே அதிகளவான ரசிகர்கள் இருப்பதுடன் திரைக்குள்ளே பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களும் இவரின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அந்த வரிசையில் 'டிராகன்' திரைப்பட இயக்குநர் அஸ்வத் சமீபத்திய பேட்டியில் விஜயைப் பற்றிய தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அஸ்வத் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் என்றதுடன் அவருடைய படங்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் பார்ப்பேன் என்றார். விஜயின் நடிப்பு, ஸ்டைல் மற்றும் மாஸான தோற்றம் எல்லாமே ரசிகர்களை பிரமிக்க வைக்கும். எனவே, இவரது திரை பயணத்தைக் குறித்து நான் முடிவெடுக்கும்போது, "விஜய் ஜனநாயகன் படம் எனக்கு கடைசி படமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
அத்துடன், "விஜயின் 'கில்லி' எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தின் எமோஷன், காதல் மற்றும் ஆக்சன் எல்லாமே சூப்பராக இருந்தது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தைக் ரீமேக் செய்து அதை புதிய தலைமுறைக்கு கொண்டு வர ஆசைப்படுகிறேன் என்றார். அத்துடன், அதை என் கனவாகவே வைத்திருக்கிறேன்," என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "எனக்கு ஓர் உறுதிப்பாடு இருக்கிறது, விஜய் திரும்ப நடிக்க வருவார் என்று ஏனெனில் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மிகவும் வலுவானதாக இருப்பதே ஆகும். மேலும் அவர், விஜய் திரும்ப நடிக்க வந்தால் நான் தான் முதல் ஆளாக அவரின் வீட்டுவாசலில் போய் நிற்பேன் என்றார். அத்துடன் அவரிடம் நேரில் சென்று, அவருடன் பேச வேண்டும் என விரும்புகிறேன்," என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
அஸ்வத் பகிர்ந்த இந்த உருக்கமான கருத்துகள், விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பேட்டி வைரலாக பரவி வருகின்றது. அத்துடன் விஜய் திரை உலகிற்கு மீண்டும் வருவதனை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அஸ்வத்தின் இந்த பேட்டி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!