தென்னிந்திய திரைப்பட உலகில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தில் இணைந்துள்ளதாக சமூக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய நடிப்புத் திறமை மற்றும் அழகு என்பவற்றால் பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்குகின்றார்.
பூஜா ஹெக்டே தனது திரைப்பயணத்தை 2012ஆம் ஆண்டு 'முகமூடி' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் பிரபலமானார். 'ஒகா லைலா கோசம்' மற்றும் 'முகுந்தா' போன்ற தெலுங்கு படங்கள் ரசிகர்களிடையே அவருக்கு சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. பின்னர், ஹிந்தி பட உலகில் 'மோகஞ்சோதாரோ' படம் மூலம் பிரவேசித்தார்.
தற்பொழுது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதுமே, அவரின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இதன் மூலம், தமிழ் திரையுலகில் மீண்டும் சிறப்பாக தன்னை நிலைநாட்ட அவர் தயாராகி உள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பூஜா ஹெக்டே தனது சிறப்பான நடிப்புத் திறன் மற்றும் ரசிகர்களின் ஆதரவால், பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது ரஜினிகாந்தின் படத்தில் இணைவது அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
Listen News!