• Apr 18 2026

எங்கள காப்பாத்த யாரும் வரமாட்டாங்களா.? வேதனையில் குமுறும் இயக்குநர் ஹெச். வினோத்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் மை லார்ட். நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான இந்த படம் சமூக மற்றும் அரசியல் அடுக்குகளைக் கொண்ட கதைக்களத்தால் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் ‘மை லார்ட்’ படத்தைப் பற்றி கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


ஒரு பேட்டியில் பேசிய ஹெச். வினோத், ‘மை லார்ட்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, “மை லார்ட் படத்தில பல ஆயிரம் வருஷமா இருக்கிற அரசியல் இருக்கு. இந்தப் படத்தில் ( நடிகர் சசிகுமார் ) முத்துச் சிற்பி நிறைய அரசியல் பேசி இருக்கார். ஆனா, இதையே நாங்க பேசுனா காப்பாத்த எந்தப் பத்திரிகையாளரும் வரமாட்டாங்க...” என்றார். 

இந்த கருத்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. வினோத் கூறிய இந்த வாக்கியம், திரைப்படங்களின் அரசியல் கருத்துகள் மற்றும் ஊடக அணுகுமுறை குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.

ஹெச். வினோத் கூறிய கருத்தின் பின்னணி, அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது சென்சார் சிக்கல்களை சந்திப்பதால் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement