• Apr 16 2026

சம்பளத்தை உயர்த்தமாட்டேன்.! படத்தின் தரமே முக்கியம்.. நடிகர் சசிகுமார் பேட்டி

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிற நடிகர் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பட உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ

சசிகுமார் அதன்போது, "அயோத்தி, டூரிஸ்ட் பேமிலின்னு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் போது ஏன் சம்பளத்தை உயர்த்தலன்னு கேட்பாங்க. ஆனா, நல்ல கன்டென்ட் உள்ள படம் ஓடுதுனு எல்லாரும் சம்பளத்தைக் கூட்டினா நடிகர்கள் சம்பளம் தான் கூடும். 


படத்தோட பட்ஜெட் கம்மி ஆகிடும். அதுவே, நான் சம்பளத்தைக் குறைச்சால் அந்தப் பணத்தை படத்துக்காக போடலாம். படம் நல்லா வரும். அதையெல்லாம் தாண்டி நானும் தயாரிப்பாளரா இருந்தவன் தான். 2 படம் ஓடினதும் 2 கோடி அதிகமா கொடுங்கன்னு நான் கேட்கமாட்டேன். எனக்கு கம்மி சம்பளமே போதும்." என்று கூறியிருந்தார். 

சசிகுமாரின் இந்த கருத்து, திரைப்பட உலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. பொதுவாக ஒரு ஹிட் படத்தின் பின்னர் நடிகர்களின் சம்பள உயர்வு துரிதமாக நடக்கின்றது. ஆனால், சசிகுமார் படத்திற்கான முதலீடு மற்றும் தரமான கதைக்கே முன்னுரிமை கொடுப்பது பாராட்டத்தக்க விடயமாக கருதப்படுகிறது. 

Advertisement

Advertisement