• Oct 26 2024

தீபாவளி போனஸ்! இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்! அங்கதான் இருக்கு டுவிஸ்ட்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் 8 நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ரவீந்தர்,அர்னவ் ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார் என்பது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.   


இதில் டேஞ்சர் இடத்தில் பவித்ரா, தர்ஷாகுப்தா, அன்சிதா ஆகியோர் இருந்தனர். ஆனால் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மூலம் பவித்ரா கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் தர்ஷா அல்லது அன்சிதா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி இந்த வாரம் பிக் பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். 

d_i_a



அதன்படி இந்த வாரம் வீட்டை விட்டு யாரும் வெளியேறப் போவது கிடையாது. தீபாவளி போனஸ் போல் எலிமினேஷன் கிடையாது என விஜய் சேதுபதி அறிவிக்க போகிறார். பண்டிகை கால சலுகையாக போட்டியாளர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த வாரம் இரண்டு பேர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் வாரம் ஆட்டம் கொஞ்சம் சூடு பிடிக்கும் என தெரிகிறது.


Advertisement