• Dec 26 2024

பிக் பாஸ் போக முதல்ல இத செய்ங்க... நான் வெளியவர முக்கிய காரணம் இவங்கதான் பிக் பாஸ் கூல் சுரேஷ் முதல் பேட்டி

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றிய கூல் சுரேஷ் அவர்கள் தற்போது பிக் போஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வாரத்துக்கு இதுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் விட்டு வெளிய வந்தது சந்தோசம் இவ்வளோ நாள் மக்கள் என்னக்கு சப்போட் பண்ணி இருக்காங்க அவங்களுக்கும் நன்றி.  நீங்க பிக் பாஸ் வீட்டுக்குள்ள போக முதல்ல கொள்ள கூட்ட தலைவன் ,கிரிமினல் இவங்க கிட்ட போயிட்டு 6 மாசம் ட்ரெய்ன்னிங் எடுக்கணும். எப்படி கேம் விளையாடலாம் எப்படி மாத்தி மாத்தி பேசலாம் என்று பழகணும்.


அப்புறம் காவல் துரைகிட்ட ஒரு 6 மாசம்  ட்ரெய்ன்னிங் எடுக்கணும் எப்படி கிரிமினல் ஆட்களை கண்டு பிடிக்கலாம் என்று கத்துகிறதுக்கு போகணும் நான் ஒன்னும் ரெடி ஆகி போக இல்ல அதான் வெளிய வந்துட்டேன் அதுமட்டும் இல்லாம எனக்கு குடும்பம் ஞாபகமாகவே இருந்துச்சி.


நான் வெளிய வந்த பிறகு அவங்க என்னோட கோவப்பட்டாங்க இன்னும் கொஞ்ச நாள் தானே இருந்து இருக்கலாம்னு ஆனா ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனா நான் என் குடும்பத்தை பார்த்துக்கணும் அதுமட்டும் தான் நான் போன நாள்ல இருந்து தோணிட்டே இருந்துச்சி அது தான் நான் வெளிய வரணும் என்று தோணுவதற்கு முதல் காரணம் என கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement