• Dec 26 2024

நடிகை நஸ்ரியாவின் தம்பியைப் பார்த்திருக்கின்றீர்களா?- ஹீரோவைப் போல அழகாக இருக்கின்றாரே..

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை நஸ்ரியா.இதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜா ராணி. அட்லீ இயக்கிய இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இவர்களின் கியூட்டான கெமிஸ்ட்ரி அப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. அதுமட்டுமின்றி அப்படத்தில் துறுதுறுவென நடித்திருந்தாலும் விபத்தில் சிக்கும் காட்சியில் இவரின் நடிப்பை பார்த்து கண்கலங்காதவர்கள் இருக்க முடியாது அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார்.


பின்னர் தனுஷுடன் நையாண்டி, ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்த நஸ்ரியா, சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் இன்றைய தினம் இவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் நஸ்ரியாவின் தம்பி அவரின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்த புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement