• Dec 26 2024

ஜாக்கெட் இருக்கா? இல்லையா? மெழுகு சிலைபோல் ஜொலிக்கும் தமன்னாவின் லேட்டஸ் கிளிக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஹீரோயின் கேரக்டரில்  நடித்து வரும் நடிகை தான் தமன்னா . இவருக்கு 35 வயதுகளை கடந்த போதும் சினிமா துறையில் அதே இளமையில் ஜொலித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. அந்த படத்தில் வெள்ளையாக இருந்தாரே  தவிர அவருக்கு நடிப்பு பெரிதாக ஏடுபடவில்லை. அதன் பின்பு கல்லூரி, வியாபாரி, படிக்காதவன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் வசூலிலும் கொடி கட்டி பறந்தன.

இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, கார்த்தி, விஜய், தனுஷ் என பலருடன் ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, பாலிவுட் சினிமாவிலும் பிஸியான நடிகையாக காணப்படுகின்றார் தமன்னா.

d_i_a

35 வயதான தமன்னாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஆனால் தமன்னாவும் விஜய் வர்மாவும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை தமன்னாவே  வெளிப்படையாக கூறியும் இருந்தார்.


தமிழில் இறுதியாக வெளியான அரண்மனை 4 படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பில் மிரட்டி இருப்பார் தமன்னா. இந்த படம் 100 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்திருந்தது. தற்போது இரண்டு தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், நடிகை தமன்னா வெளியிட்ட போட்டோ சூட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கருப்பு கலர் ஆடையில் மெழுகு சிலை போல் காணப்படுகின்றார். தற்போது இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் உருகி வருகின்றனர்.

Advertisement

Advertisement