• Dec 26 2024

8 ஆண்டுகளை கடந்த சிம்புவின் மாஸ் படம்..! கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்த Throwback க்ளிக்!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மின்னலே என்ற படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.. இவருடைய படங்கள் என்றாலே காதல், ஆக்சன், எமோஷனல் என அனைத்து உணர்ச்சிகளும் உள்ளடக்கப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில், கௌதம் வாசுதேவ மேனனின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியாகி 8 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாக கௌதம் வாசுதேவ மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

d_i_a

சிம்பு - மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்த அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.


இவ்வாறான நிலையிலேயே தற்போது இந்த திரைப்படம் எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதாக கௌதம் வாசுதேவ மேனன் பகிர்ந்து புகைப்படத்தில் சிம்பு அவரை தூக்கி வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய பதிவுக்கு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement